Kerala Boat | சுழன்று அடித்த சூறைக்காற்று - நடுக்கடலில் அலைமோதிய விசைப்படகு

Update: 2025-10-29 02:36 GMT

Kerala Boat | சுழன்று அடித்த சூறைக்காற்று - நடுக்கடலில் அலைமோதிய விசைப்படகு

கேரள மாநிலத்தில் கடலில் மீன்பிடிக்க சென்ற விசைப்படகு, சூறைக் காற்றில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பொன்னானி பகுதியில் இருந்து, விசைப் படகில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கடலில் வீசிய சூறைக் காற்றால் விசைப்படகு முன்னோக்கி செல்ல முடியாமல் அலைமோதியது. விசைப்படகை கவிழ்க்கும் அளவுக்கு காற்று சுழற்றி அடித்த நிலையில், மீனவர்கள் உடனடியாக கரையை நோக்கி வந்ததால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்