Kenya PM Death | நடைப்பயிற்சி சென்ற கென்யாவின் முன்னாள் பிரதமர் உயிரிழப்பு
கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யா நாட்டின் முன்னாள் பிரதமர் ரைலா ஒடிங்கா, மகளுக்காக கேரளாவில் சிகிச்சை பெற வந்த இடத்தில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே கூத்தாட்டு குளம் பகுதியில் மகளுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக ஆறு நாட்களுக்கு முன்பு வருகை தந்திருந்த அவர், நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டதில் உயிரிழந்தார். அவரது உடலை கென்யாவிற்கு எடுத்து செல்வதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.