``கேரளா, தமிழகம், மே.வங்கம் புறக்கணிப்பு..''``பட்ஜெட்டில் குறிப்பிடாத காரணம்..'' ப.சிதம்பரம்
மத்திய பட்ஜெட்டில், தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். பீகார் தேர்தலை கருத்தில் கொண்டு தான் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டதாக கூறிய அவர், கேரள மற்றும் தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கைகள் மத்திய பட்ஜெட்டில் நிராகரிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். எல்லா மாநிலங்களுக்கும் பொதுவான பட்ஜெட் என்றால், குறைகள் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது எனவும் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.