தமிழ் நாட்டில் இருந்து காசி தமிழ்ச் சங்கம நிகழ்விற்கு ஏராளமானோர் சிறப்பு ரயில்கள் மூலம் சென்றுள்ளனர். உத்தரப் பிரதேசம், வாரணாசியில், காசி - தமிழ்நாடு இடையிலான வரலாற்று தொடர்புகளை வலுபடுத்தும் வகையில் வருடம் தோறும் காசி தமிழ்ச் சங்கமம் ஒருங்கிணைக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழ் நாட்டில் இருந்து வெவ்வேறு துறைகளில் இருந்து 1000 பேர் காசி தமிழ் சங்கமத்திற்கு கன்னியாகுமரி, சென்னை மற்றும் கோவையில் இருந்து சிறப்பு ரயில்கள் மூலம் புறப்பட்டனர். கோவையிலிருந்து புறப்பட்ட ரயிலில் வெடிகுண்டு சோதனை நடத்தபட்ட பின்னரே பயணிகள் ரயிலில் ஏற அனுமதிக்கப்பட்டனர்.