Karti Chidambaram | ஏர்செல் மேக்சிஸ் வழக்கு - கார்த்தி சிதம்பரத்திற்கு அதிரடி உத்தரவு
ஏர்செல் மேக்சிஸ் வழக்கு - கார்த்தி சிதம்பரத்திற்கு அதிரடி
உத்தரவு
ஏர்செல் மேக்சிஸ் வழக்கு - கார்த்தி சிதம்பரம் பதில் அளிக்க உத்தரவு
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில், அமலாக்கத் துறையின் மேல்முறையீடு மனுவுக்குப் பதில் அளிக்குமாறு கார்த்தி சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏர்செல் மேக்சிஸ் வழக்கின் குற்றப்பத்திரிக்கை மீதான விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளி வைத்திருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத் துறை தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை உச்சநீதி்மன்ற நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
அப்போது, டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவால் ஏர்செல்- மேக்சிஸ் வழக்கு விசாரணை தாமதமாவதாக அமலாக்கத் துறை முன்வைத்த வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
மேலும், அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டு மனு மீது பதில் அளிக்குமாறு கார்த்தி சிதம்பரத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை உச்சநீதிமன்றம் தள்ளி வைத்தது.