சபரிமலை வரும் பக்தர்கள் கேரளாவில் உயிரிழந்தால் 5 லட்ச ரூபாய் இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
இந்தநிலையில், கேரள மாநிலத்தில் எங்கு விபத்து நடந்து ஐயப்ப பக்தர்கள் உயிரிழக்க நேரிட்டாலும் இந்த இன்சூரன்ஸ் தொகையானது கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கையாக மரணமடையும் பக்தர்களுக்கு மூன்று லட்ச ரூபாய் இன்சூரன்ஸ் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.