குருவாயூர் கோயில் குளத்தில் கால் கழுவிய இன்ஸ்டா பிரபலம் - வெடித்த பிரச்சனை
கேரள மாநிலம் குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலின் குளத்தில், சுத்திகரிப்பு சடங்கை நடத்துவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இன்ஸ்டாகிராம் பெண் பிரபலம் ஒருவர், கோவில் குளத்தில் கால் கழுவுவது போன்ற ரீல்ஸ் வீடியோவை சமுக வலைத்தளத்தில் பதிவிட்டார். இது மத விதிமுறைகளை மீறும் செயல் என பொதுமக்கள் கொந்தளித்த நிலையில், அந்த பெண் வீடியோவை நீக்கிவிட்டார். இதையடுத்து குளத்தில் சுத்திகரிப்பு சடங்கு நடத்தப்படுவதால், சாமி தரிசனம் அதிகாலை 5 மணி முதல் நண்பகல் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் சடங்குகள் முடிந்த பிறகு மாலையில் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப் படுவார்கள் என தெரிவித்துள்ளது.