அசகாய சூரனை இறக்கிய இந்தியா - பாகிஸ்தானை குலைநடுங்க விடும் `அப்பாச்சி’

Update: 2025-07-23 03:54 GMT

இந்திய ராணுவத்தில் இணையும் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் - என்ன சிறப்பு?

  • உலகின் மிகவும் சக்திவாய்ந்த தாக்குதல் ஹெலிகாப்டராக பார்க்கப்படும் அப்பாச்சி AH-64E ரக ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படையின் வலிமையை அதிகரிக்க உள்ளன.
  • இந்த அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள், 30 மில்லி மீட்டர் M230 செயின் கன் (30 mm M230 chain gun), 70 மில்லி மீட்டர் ஹைட்ரா ராக்கெட்டுகள்,
  • 6 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள பீரங்கிகள், கவச வாகனங்களை தாக்கி அழிக்கும் AGM-114 ஹெல்ஃபயர் (AGM-114 Hellfire) ஏவுகணைகளை ஏந்தி செல்லும்.
  • மழை, தூசு, மூடுபனி, இரவு பகல் என அனைத்து சூழல்களிலும் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் செயல்படும்.
  • 2 இருக்கைகள் மட்டுமே கொண்டிருந்தாலும், இரண்டு பைலட்டுகளுமே, ஹெலிகாப்டரையும் ஆயுதங்களையும் கையாள முடியும்.
  • ரோட்டருக்கு மேல் AN/APG-78 லாங்போ ரேடார் அமைப்பு இருப்பதால், மலைகள், மரங்கள், கட்ட‌டங்களுக்கு பின்னால் மறைந்திருந்து ஒரே நேரத்தில் 128 தரை இலக்குகளை கண்காணிக்க முடியும்.
  • 2020ஆம் ஆண்டில் 5 ஆயிரத்து 691 கோடி ரூபாய்க்கு 6 அப்பாச்சி ஹெலிகாப்டர் வாங்க, அமெரிக்காவின் போயிங் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
  • தற்போது, 3 அப்பாச்சி விமானங்கள், சரக்கு விமானம் மூலம் உத்தரபிரதேச மாநிலம் ஹிண்டன் விமான படைதளத்திற்கு வந்துள்ள நிலையில், மீதமுள்ள 3 விரைவில் வர உள்ளன.
  • இவை, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ராணுவ முகாமில் இணைக்கப்பட உள்ளன. பாகிஸ்தான் ராணுவத்தை எதிர்கொள்ளும் வகையில், ராஜஸ்தானின் பாலைவனத்திற்கு ஏற்ப அதன் நிறம் மாற்றப்பட்டுள்ளது. இந்திய விமானப்படையில் ஏற்கனவே 22 அப்பாச்சி ரக போர் விமானங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்