India | Russia | இந்தியா - ரஷ்யா நட்பை உடைக்க டிரம்ப் போட்ட மெகா ஸ்கெட்ச்

Update: 2025-11-19 17:00 GMT
  • இந்தியா - ரஷ்யா நட்பை உடைக்க டிரம்ப் போட்ட மெகா ஸ்கெட்ச்.
  • 2 ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடையை விதித்ததை தொடர்ந்து, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது 66% சரிந்துள்ளது.
  • உக்ரைனில் போரை நிறுத்துவதற்கு, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு 50% இறக்குமதி வரியை விதித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
  • ஆனாலும், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தாத வேளையில், ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெஃப்ட் (Rosneft) மற்றும் லுகோயிலை (Lukoil) நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது.
  • இதன் தொடர்ச்சியாக இந்திய நிறுவனங்கள் அமெரிக்கா பொருளாதார தடையை விதித்த ரஷ்ய நிறுவனங்களிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த தொடங்கின.
  • இதனால் நவம்பரில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது 66% சரிந்துள்ளது.
  • அதாவது அக்டோபர் மாதம் நளொன்றுக்கு ரஷ்யாவிடம் இருந்து 18 லட்சத்து 80 ஆயிரம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்கிருந்தது.
  • அதுவே நவம்பரில் ஒன்றாம் தேதியில் இருந்து 17 ஆம் தேதி வரையில் நாளொன்றுக்கு 6 லட்சத்து 72 ஆயிரம் பீப்பாய் கச்சா எண்ணெய் என சரிந்திருக்கிறது.
  • பொருளாதார தடை விதிக்கப்பட்ட 2 ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த அமெரிக்கா 21 ஆம் தேதி வரையில் கெடு விதித்திருக்கிறது. அதேவேளையில், ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 500 % கூடுதல் வரி என்றும் டிரம்ப் மிரட்டி வருகிறார்.
  • இந்த சூழலில், இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவது வரும் மாதங்களில் மேலும் குறையலாம் என்றே துறை சார்ந்த வல்லுநர்கள் கணிக்கிறார்கள்.  
Tags:    

மேலும் செய்திகள்