"ஒரு பெண்ணிடம் i love you என சொல்வது..."நாட்டையே திரும்பி பார்க்க வைத்த கோர்ட் தீர்ப்பு
பாலியல் எண்ணமில்லாமல் ‘'ஐ லவ் யூ’ என சொல்வது பாலியல் தொந்தரவு அல்ல என்று போக்சோ வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் 17 வயது மாணவியிடம் 35 வயது இளைஞர் கையை பிடித்து ''ஐ லவ் யூ' கூறிய வழக்கில் நாக்பூர் அமர்வு நீதிமன்றம் அந்த இளைஞருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கடந்த 2017-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் மும்பை உயர்நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிபதிகள், போக்சோ வழக்கில் இருந்து இளைஞரை விடுவித்து, ஐ லவ் யூ சொல்வது பாலியல் தொல்லை ஆகாது என்று தெரிவித்துள்ளது.