பூமிக்குள் புதைய ஆரம்பித்த வீடுகள் - குரைத்து குரைத்தே 67 பேர் உயிரை காப்பாற்றிய நாய்

Update: 2025-07-09 07:08 GMT

இமாச்சலப்பிரதேசத்தில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், நள்ளிரவில் நாய் குரைத்ததால் 67 பேர் உயிர்பிழைத்துள்ளனர். இமாச்சலப்பிரதேசத்தில் கனமழை காரணமாக 16 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. குறிப்பாக மண்டி பகுதி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 30ம் தேதி, மண்டி மாவட்டத்தின் தரம்பூர் பகுதியில் உள்ள சியாதி கிராமம் நள்ளிரவில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டது. நிலச்சரிவிற்கு முன்பு அங்கிருந்த ஒரு நாய் கடுமையாக குரைத்துள்ளது.

நாயின் சத்தைதை கேட்டு கண்விழித்த வீட்டின் உரிமையாளர் நரேந்திரா என்பவர், வீட்டுச் சுவரில் விரிசல் விழுந்து தண்ணீர் உள்ளே வருவதை பார்த்துள்ளார். இதையடுத்து சுதாரித்துக்கொண்ட அவர், வீட்டில் உள்ள அனைவரையும் எழுப்பி பாதுகாப்பான இடத்திற்குச் சென்றார். மேலும், அக்கம்பக்கத்தினரையும் எச்சரித்துள்ளார். இதனால் அக்கிராமத்தில் இருந்த 20 குடும்பங்களைச் சேர்ந்த 67 பேர் உயிர்பிழைத்தனர். நிலச்சரிவில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகின.

Tags:    

மேலும் செய்திகள்