கணவரை விஷம் வைத்து கொன்ற தலைமை ஆசிரியயை போலீசார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் யவத்மால் பகுதியை சேர்ந்தவர்கள் சாந்தனு தேஷ்முக்-நிதி தேஷ்முக் தம்பதியினர். மனைவி நிதி தலைமை ஆசிரியராக பணியாற்றும் தனியார் பள்ளியில் கணவர் சாந்தனு ஆசிரியராக பணியாற்றி வந்தார், இந்த நிலையில் மது பழக்கத்திற்கு அடிமையான சாந்தனு மனைவியை துன்புறுத்தி வந்தததால் விரக்தியில் இருந்த நிதி, ஆன்லைனில் விஷ மாத்திரைகளை வாங்கி சாந்தனுவிற்கு சத்து மாத்திரை என கூறி கொடுத்து கொலை செய்துள்ளார். பின்னர் தன்னிடம் பயிலும் மாணவர்களின் உதவியுடன் கணவர் சாந்தனுவின் உடலை வனப்பகுதியில் வைத்து எரித்தை போலீசார் கண்டுபிடித்த நிலையில் மனைவி நிதியை கைது செய்தனர்.