இமாச்சல பிரதேசத்தில் நிலவும் கடும் பனிப்பொழிவு சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. மலைகள் வெள்ளை போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கிறது. இந்த காலநிலையை அனுபவிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இமாச்சல பிரதேசத்திற்கு செல்ல தொடங்கியுள்ளனர். கடும் குளிர் காரணமாக உள்ளூர் மக்கள் சாலையோரங்களில் தீ மூட்டி, தங்கள் உடலை சூடேற்றி வருகின்றனர்.