Haryana | விபரீதத்தோடு விளையாடிய 11th மாணவர்கள் - உயிர் வலியில் துடித்த பள்ளி தோழன்
குருகிராமில் அதிர்ச்சி - 11ம் வகுப்பு மாணவனை துப்பாக்கியால் சுட்ட சக நண்பர்கள்... ஹரியானாவில்11 ஆம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் 17 வயது பள்ளித் தோழனை துப்பாக்கியால் சுட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குருகிராமில் உள்ள உள்ள சென்ட்ரல் பார்க் அடுக்குமாடி குடியிருப்பில் மூன்று நண்பர்களும் அங்கு சந்தித்துள்ளனர். அப்போது, தந்தையின் உரிமம் பெற்ற துப்பாக்கியை ஒருவர் கொண்டு வந்திருந்த நிலையில், அதை வைத்து விளையாடிய போது , எதிர்பாராத விதமாக மாணவரின் கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, இரண்டு மாணவர்களையும் கைது செய்துள்ள போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.