காதல் தகராறில் இளைஞர் ஒருவரை, முன்னாள் காதலியின் நண்பர்கள் நிர்வாணமாக்கி தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களுரூ கிராமந்திர மாவட்டத்தின் நெலமங்கலா பகுதியை சேர்ந்த குஷால் என்ற இளைஞர், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக, பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, அந்த பெண்ணின் ஆண் நண்பர்கள் சிலர் ஒன்று சேர்ந்து குஷாலை நிர்வாணமாக்கி தாக்கியதுடன் அதை வீடியோ எடுத்து மகிழ்ந்துள்ளனர். மேலும் நடந்ததை வெளியில் கூறினால் குஷாலின் நிர்வாண வீடியோவை சமூக ஊடகங்களில் வைரலாக்குவதாக மிரட்டியுள்ளனர். இருப்பினும் குஷார் போலீசில் புகார் அளித்த நிலையில், வழக்குப் பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்துள்ளனர்.