CM நாயுடு முதல் டாப் தலைவர்கள் வரை... ஸ்கெட்ச் போட்டவன் என்கவுன்ட்டர்

Update: 2025-05-22 06:25 GMT

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் மற்றும் போலீசாரிடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 26 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாராயண்பூர் காடுகளில் நடைபெற்ற மாவோயிஸ்ட் தடுப்பு நடவடிக்கையின் போது, நக்சலைட்டுகள் மற்றும் போலீசாரிடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த தாக்குதலில், 26 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்களில் ஒருவரான நம்பலா, கடந்த 2003ஆம் ஆண்டு ஆந்திராவின் முதலமைச்சராக இருந்த சந்திரபாபு நாயுடு உட்பட, பல அரசியல் தலைவர்களை கொல்ல முயன்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்