ஒடிசா, மபியில் வெள்ளப்பெருக்கு - உக்கிரமாக பாய்ந்து ஓடும் வெள்ளம்

Update: 2025-07-27 02:49 GMT

கனமழையால் வெள்ளப்பெருக்கு - 3 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை

ஒடிசாவில் பெய்த கனமழையால் பைதரணி (Baitarani) ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது .

ஒடிசாவில் பெய்த கனமழை காரணமாக பைதரணி (Baitarani) ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை நீடித்து வருவதால் பாலசோர், பத்ராக், ஜாஜ்பூர் ஆகிய மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பைதரணி மற்றும் ஜலகா ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு உண்டான நிலையில் மேலும் நீர்மட்டம் உயரும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும் ,

மாவட்ட அளவிலான அதிகாரிகள் விடுப்பு எடுக்க வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்