பெலகாவியில் கரைபுரண்டு ஓடும் காட்டாற்று வெள்ளம்.. தவிக்கும் மக்கள் - பயமுறுத்தும் காட்சி
கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டம் சவதத்தி பகுதியில் பெய்துவரும் கனமழை காரணமாக பெலகாவி நகரிலிருந்து ஹாரூகொப்ப செல்லும் சாலையின் தரைப்பாலத்திற்கு மேல் காட்டாற்று ஆக்ரோஷமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் பீதியுடனயே பயணிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. கன மழை காரணமாக அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.