Mumbai | Police | மும்பை அணு ஆராய்ச்சி மையத்தில் சிக்கிய ஈரான் `கை' - வெளியான திடுக் தகவல்
மும்பையில் பாபா அணு ஆராய்ச்சி மையத்திற்குள் நுழைய முயன்ற போலி விஞ்ஞானி கைது செய்யப்பட்டார்.ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரை சேர்ந்தவர் அக்பர் உசைனி. இவர் மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்திற்குள் விஞ்ஞானி என்ற போலி அடையாள அட்டையுடன் நுழைய முயன்றார். இவரை பிடித்து விசாரித்ததில் அணு சக்தி குறித்த பல்வேறு தகவல்களை வைத்திருந்தார். இந்த தகவல்களை ஈரான் நாட்டிற்கு விற்க முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து அக்பர் உசைனியும் அவரது சகோதரர் அடில் உசைனியும் கைது செய்யப்பட்டனர்.