எக்ஸ் தளத்தில் பதிவுகளை நீக்குவது தொடர்பான வழக்கில், எலான் மஸ்க் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை கர்நாடகா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சமூக வலைதளங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும், நாட்டின் சட்டங்களை பின்பற்ற வேண்டியது கட்டாயம் என்று அறிவுறுத்தி, எலான் மஸ்க்கின் கோரிக்கையை நிராகரித்தது.