Diwali celebration டெல்லி வானில் பிரமாண்டமாக தோன்றிய லட்சுமி,விநாயகர்-சிலிர்க்க வைத்த ட்ரோன் விஷுவல்

Update: 2025-10-18 15:05 GMT

டெல்லி வானில் பிரமாண்டமாக தோன்றிய லட்சுமி, விநாயகர் - சிலிர்க்க வைத்த ட்ரோன் விஷுவல்

தீபாவளியையொட்டி, டெல்லி அரசு சார்பில் ஒன்றரை லட்சம் விளக்குகள் ஏற்றி, தியா விளக்கு திருவிழா கொண்டாடப்பட்டது. கர்தவ்யா பாத் (Kartavya Path) பகுதியில் முதலமைச்சர் ரேகா குப்தா, அமைச்சர்கள் பங்கேற்று விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர். பின்னர், வாகனத்தில் சென்று பார்வையிட்டனர்.

தியா திருவிழாவின் ஒருபகுதியாக, லேசர் மற்றும் ட்ரோன் ஷோ விமர்சையாக நடைபெற்றது. இதில், மகாபாரத‌ கதையை மையமாக வைத்து, ட்ரோன் ஷோ நடத்தப்பட்டது. தேரில் ராம‌ர் சென்று ராவணனை தாக்குவது, ராமனை அனுமன் வழிபடுவது உள்ளிட்டவை ட்ரோன்கள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்