வாடிக்கையாளரை கண்மூடித்தனமாக தாக்கிய டெலிவரி பாய் - பரபரப்பு காட்சிகள்

Update: 2025-05-27 04:48 GMT

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், செப்டோ டெலிவரிபாய் வாடிக்கையாளரை கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு பசவேஸ்வரா நகர் பகுதியில் வசிக்கும் சஷாங்க் என்பவரது மைத்துனி, ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்துள்ளார். இவர், டெலிவரி முகவரியை சரியாக குறிப்பிடவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் முகவரியை அறிய டெலிவரி பாய் சிரமப்பட்ட நிலையில், பொருட்களை வழங்க வந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த டெலிவரிபாய் விஷ்ணுவர்தன், சஷாங்கை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். இதுகுறித்த காட்சிகள் சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது.

சஷாங்க் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சம்பவம் குறித்த வீடியோ வைரலான நிலையில், விஷ்ணுவர்த்தனை செப்டோ நிறுவனம் பணியில் இருந்து நீக்கியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்