ஒரே வருடத்தில் 10 முறை துபாய் விசிட்.. நடிகைக்கு சுத்துப்போட்ட சுங்க வரித்துறை

Update: 2025-03-06 00:58 GMT
  • வாகா திரைப்படத்தின் “ஏதோ மாயம் செய்கிறாய்“ என்கிற பாடல் மூலம் தமிழகத்திற்கு அறிமுகமான முகம் தான் நடிகை ரன்யா ராவ்...
  • தமிழ் மற்றும் கன்னடத்தில் முன்னணி நடிகர்களோடு ஜோடிப்போட்டு நடித்தபோதும் ரன்யாவிற்கு கேரியரில் Break Through கிடைக்காமலயே இருந்தது.
  • இந்த சூழலில் தான், ரன்யாராவ் அடிக்கடி வெளிநாட்டிற்கு இன்ப சுற்றுலா சென்று வந்திருக்கிறார். அதுவும் கடந்த 15 நாட்களில் அவர் நான்கு முறை துபாய்க்கு பயணப்பட்டிருப்பது தெரியவர சுங்கதுறை அதிகாரிகளுக்கும் நடிகை ஏதோ மாயம் செய்கிறார் என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது.
  • அதன்காரணமாக, சென்ற மார்ச் 2ஆம் தேதி துபாயிலிருந்து பெங்களூர் விமான நிலையத்தில் வந்திறங்கிய நடிகை ரன்யா ராவை கஸ்டம்ஸ் அதிகாரிகள் வழிமறித்து சோதனை செய்திருக்கிறார்கள். அப்போது அவர் அணிந்திருந்த பெல்ட்டில் 14 கிலோ தங்கம் மறைத்து வைத்திருந்தது தெரியவந்திருக்கிறது. அதன் சந்தை மதிப்பு 10 கோடிக்கும் மேல் இருக்குமென சொல்லப்படுகிறது.
  • உடனடியாக ரன்யா ராவ்வை கைது செய்த போலீஸார் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் மேலும் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்திருக்கின்றன.
  • கர்நாடகா மாநிலத்தை பூர்விகமாக கொண்ட ரன்யா ராவ் ஒரு இன்ஜினியரிங் பட்டதாரி. இவருடைய தந்தை ராமசந்திர ராவ் பெங்களூர் போலீஸ் டிபார்ட்மெண்டில் டிஜிபியாக பணியாற்றி வருகிறார். மாடலிங்கில் அதீத ஆர்வம் கொண்டிருந்த ரன்யாவிற்கு அதன்மூலம் ஒருசில திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்கும் சான்ஸ் கிடைத்திருக்கிறது.
  • ரன்யாவின் தந்தை டிஜிபி என்கிற காரணத்தாலும், அவர் சினிமா ஹிரோயின் என்கிற அந்தஸ்தை பெற்றிருந்ததாலும் விமானநிலையத்தின் விஐபி கேட் வழியாக ரன்யா சென்று வர அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
  • பொதுவாக, செலிபிரிட்டீஷ்கள் விஐபி கேட் வழியாக வெளியேறும் போது அவர்களுக்கு Escort பாதுகாப்பு கொடுக்கப்படுவது உண்டு. அதுமட்டுமின்றி, செலிபிரிடீஷ்களை சிரமப்படுத்தாமல் வழியனுப்பி வைப்பதற்காக அவர்களை தேவையின்றி அதிகாரிகள் ஸ்கிரினிங் செய்து சோதனையிடுவதில்லை.
  • ஏர்போர்ட் ஃபார்முலாடீயிலிருந்த இந்த குளறுபடியான வசதியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ரன்யா ராவ் கடந்த ஒரே வருடத்தில் 10 முறை துபாய்க்கு சென்று திரும்பியுள்ளார்.
  • சினிமாவில் சான்ஸ் இல்லாத நடிகை எதற்காக அடிக்கடி துபாய்க்கு சென்று வருகிறார் என்கிற சந்தேகம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு எழுந்திருக்கிறது. ரன்யாவிற்கு துபாயில் ஏதேனும் பிஸ்னஸ் உள்ளதா என்றும் தீர விசாரித்துள்ளனர்.
  • அதிலும், நடிகைக்கு துபாயில் எந்த முதலீடும் இல்லை அவர் சுற்றுலா நிமிர்த்தமாகவே துபாய் சென்று வந்திருப்பது தெரியவந்திருக்கிறது. மேலும் பெங்களூரிலிருந்து புறப்படும் போது விதவிதமான ட்ரஸ்ஸில் Takeoff ஆகும் ரன்யா மீண்டும் ஏர்போட்டில் தரையிறங்கும் போது ஓரே மாதிரியான ஆடைகளுடன் வந்தது அதிகாரிகளின் சந்தேகத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.
  • அதன்காரணமாக சம்பவ நடந்தன்று விஐபி கேட்டில் ரன்யாவை வழிமறித்த அதிகாரிகள் அவரை சோதனைசெய்துள்ளனர். ரன்யாவும் எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் சோதனை ஒத்துழைத்திருக்கிறார். அவரிடம் பதட்டமோ பதைபதைப்போ இல்லை. எனினும் அதிகாரிகளின் உள்ளுணர்வு ஏதோ தவறாக இருக்கிறதென ஆழமாக நம்பி இருக்கிறது. நடிகை அணிந்திருந்த ஆடைகளை சோதனை செய்திருக்கிறார்கள். அப்போது தான் பேண்டில் அனிந்திருந்த பெல்ட்டில் அவர் மறைத்து வைத்திருந்த 14 கிலோ கோல்டு பிஸ்கட்ஸுடன் வசமாக சிக்கி இருக்கிறது.
  • ஏர்போர்ட் அதிகாரிகளின் துணையின்றி ரன்யாவால் இதனை செய்திருக்க முடியாது என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது. அதன் காரணமாக துறை ரீதியிலான விசாரணையும் தற்போது வேகமெடுத்திருக்கிறது.
  • அதுமட்டுமின்றி ரன்யாவின் தந்தை டிஜிபியாக உள்ள காரணத்தால் அந்த பவரை மிஸ்யூஸ் செய்து Smuggling Business நடந்திருக்கிறதா என்கிற கோணத்திலும் விசாரித்துள்ளனர்.
  • எனினும், இது தொடர்பாக ஊடகங்களிடம் மனம் திறந்துள்ள ரன்யாவின் தந்தை ராமசந்திர ராவ், நடந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாகவும், மகள் திருமணம் செய்து கொண்ட பிறகு தன்னுடைய வீட்டிற்கே வருவதில்லை என்றும் அவரை நாங்கள் பார்த்தே நான்கு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதென தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமின்றி ரன்யா செய்த குற்றத்திற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறியவர். தன்னுடைய மகள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் தொடரும் அதில் என்னுடைய தலையீடு இருக்காது என தெரிவித்துள்ளார்.
  • இந்த சம்பவம் தொடர்பாக ரன்யாவை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்திரவிடப்பட்டிருக்கிறது.
  • ரன்யா ராவ் இதற்கு முன் இதே பாணியில் எத்தனை முறை தங்கம் கடத்தி வந்திருக்கிறார். அவருக்கு பின்னணியில் இருக்கும் நெட்வொர்க் யார் ? கோல்டு Smuggling-ல் மட்டும் தான் ஈடுப்பட்டுள்ளாரா அல்லது போதை பொருட்களையும் அங்கிருந்து கடத்தி வந்துள்ளரா? போன்ற பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரன்யா ராவ்வின் கேஸில் விரைவில் பல முக்கிய புள்ளிகளும் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.ஒரே வருடத்தில் 10 முறை துபாய் விசிட்.. நடிகைக்கு சுத்துப்போட்ட சுங்க வரித்துறை

Tags:    

மேலும் செய்திகள்