கர்நாடகாவில், ஐ.பி.எல். கிரிக்கெட் சவாலில் தோல்வியடைந்த சி.எஸ்.கே ரசிகர் ஒருவர், தனது பாதி தலையை மொட்டையடித்துக்கொண்டார்.
ஆர்.சி.பி. கோப்பை வென்றால் பாதி தலையை மொட்டையடித்துக்கொள்வதாக, பெல்காம் மாவட்டத்தை சேர்ந்த சி.எஸ்.கே ரசிகர்
மகாவீர் கிரண் என்பவர், தனது நண்பர்களிடம் சவால் விட்டிருந்தார். ஆர்சிபி ஐபிஎல் கோப்பையை வென்ற நிலையில், நண்பர்கள் முன்னிலையில் மொட்டையடித்துக் கொண்டார். இதுகுறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.