மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி பகுதியில் நிலவும் தொடர் மின்வெட்டால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் சிலர், வால்காவுன் பகுதியில் உள்ள துணை மின் நிலைய அலுவலகத்திற்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக அதிகாரிகளுடன் வாக்குவாத்தில் ஈடுபட்ட அந்த இளைஞர்கள் அங்கு இருந்த நாற்காலிகள் மற்றும் மேஜையின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தங்களது ஆத்திரத்தை வெளிப்படுத்தினர்.