காதலனுடன் சென்ற கல்லூரி மாணவி- காட்டுக்குள் நிர்வாண நிலையில் சடலமாக மீட்பு..
காதலனுடன் சென்ற கல்லூரி மாணவி- காட்டுக்குள் நிர்வாண நிலையில் சடலமாக மீட்பு.. ஆந்திராவில் பகீர் சம்பவம்
ஆந்திராவில் சுற்றுலா சென்ற கல்லூரி மாணவி வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடப்பா மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த வைஷ்ணவியும் லோகேஷ் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் மாணவி வைஷ்ணவி காதலன் லோகேஷுடன் கண்டிக்கோட்டைக்கு சுற்றுலா சென்றுள்ளார். பின்னர் கண்டிக்கோட்டை வனப்பகுதியில் மாணவி வைஷ்ணவி நிர்வாண நிலையில் சடலாமாக கிடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் வைஷ்ணவியின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். மேலும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது மாணவி வைஷ்ணவி லோகேஷுடன் பைக்கில் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து தலைமறைவாக உள்ள லோகேஷை போலீசார் தேடி வருகின்றனர்.