College Function | Kerala | கல்லூரி வளாகத்தில் ஹெலிகாப்டரில் வந்திறங்கிய மாவேலி மன்னன்
கேரளாவில் ஓணம் கொண்டாட்டத்தின் போது, ஹெலிகாப்டரில் மாவேலி மன்னன் வந்திறங்கிய உற்சாக நிகழ்வு அரங்கேறியுள்ளது. கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற ஓணம் கொண்டாட்டத்தின் போது, மாவேலி மன்னன் வானத்திலிருந்து இறங்கி வரவேண்டும் என்பதற்காக, வாடகை ஹெலிகாப்டரில் கல்லூரி வளாகத்திற்குள் மாவேலி மன்னன் வேடமணிந்த மாணவர் வந்து இறங்கினார். இதனை பார்த்த கல்லூரி மாணவ மாணவிகள் உற்சாகமடைந்து, ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய மன்னனுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.