Kerala | Fake Govt Staff | அரசு அதிகாரி எனக் கூறி காசோலை மோசடி - வெளியான சிசிடிவி காட்சி
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில், தன்னை அரசு அதிகாரி என கூறிக் கொண்டு மனு என்ற நபர், பர்னிச்சர் மற்றும் போன் கடைகளில் போலி காசோலைகளை கொடுத்து லட்சக்கணக்கில் மோசடி செய்த நிலையில், அவரை போலீசார் தேடி வருகின்றனர். கிராம பஞ்சாயத்து அதிகாரி எனப் குறிப்பிடப்பட்ட வண்டியில் வந்த இவர், 10 லட்சம் ரூபாய் மதிப்புடைய பொருட்களை வாங்கி விட்டு போலியான காசோலை கொடுத்து மோசடி செய்ததாக கூறப்படுகிறது. கடைக்காரர்களின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த திருவல்லா போலீசார், தலைமறைவான மனு என்ற நபரை தேடி வருகின்றனர். இந்த சூழலில், அவர் போன் கடைக்கு வந்து சென்ற சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.