நாடாளுமன்றத்தில் அன்றாடம் நடைபெறும் அலுவல் தொடர்பான List of Business எனப்படும் நாடாளுமன்ற அலுவல் பட்டியல், இனிமேல் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, அவை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, மராத்தி உள்ளிட்ட 10 மாநில மொழிகளில் மொழிமாற்றம் செய்து வழங்கப்பட உள்ளது. இதற்கு முன்பு ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மட்டுமே இது வெளியிடப்பட்டு வந்த நிலையில், இந்த அறிவிப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.