கேரளாவில் மதுபோதையில் இருந்த நபர் காரை ஓட்டிச் சென்றதில் கார் ஆற்றினுள் மூழ்கியது. கேரளா மாநிலம் கோட்டயம் அருகே வைக்கம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் மதுபோதையில், காரை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கார் ஆற்றுக்குள் மூழ்கியது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் படகில் சென்று காரில் இருந்த நபரை காப்பாற்ற கார் கதவை திறந்த போது காரினுள் தண்ணீர் புகுந்து கார் முழுவதுமாக மூழ்கியது. இதனால் ஆத்திரமடைந்த நபர் காப்பாற்றியவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.