ஸ்கூலுக்கு லேட்டாக வந்த மாணவனுக்கு நடந்த கொடூர சித்திரவதை.. கேரளாவில் பயங்கரம்

Update: 2025-08-15 06:06 GMT

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே தனியார் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரஸ் மற்றும் போலீசார் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. திருக்காக்கரை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தாமதமாக வந்த 5 ஆம் வகுப்பு மாணவனை இருட்டு அறையில் அடைத்ததுடன், பள்ளி மைதானத்தில் ஓட விட்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்ட கேரள கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி, அவசர அறிக்கை சமர்ப்பிக்க எர்ணாகுளம் துணை கல்வி இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, மாணவர் அமைப்புகள் பள்ளியில் போராட்டம் நடத்தினர். அப்போது, இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட அனைவரும் கைது செய்யப்பட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்