கொதிக்கும் பூமி.. மக்களை வாட்டி வதைக்கும் வெயில் - அதிர்ச்சி ரிப்போர்ட்
இந்தியாவில் அதிகபட்சமாக குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் 108.14 பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் குஜராத், ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் ஒரு சில பகுதிகளில் வெப்ப அலை வீசியுள்ளது. அந்த வகையில் அதிகபட்சமாக குஜராத்தில் 108.14 பரான்ஹீட்டும், அடுத்தபடியாக சட்டீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கானில் 107.6 பரான்ஹீட்டும் வெப்பம் பதிவானது.