Bike Accident || ப்ரோ உடன் பைக்கில் சென்ற சகோதரி.. நொடியில் ப்ரோ எடுத்த முடிவால் நடந்த கொடூர விபத்து

Update: 2025-10-25 12:12 GMT

பெங்களூரில் சாலையில் இருந்த பள்ளத்தை தவிர்க்க முயன்றபோது பெண் ஐடி ஊழியர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது... மதநாயக்கன ஹள்ளி - ஹூஸ்கூர் சாலையில் 26 வயதான பெண் ஐ.டி. ஊழியர் பிரியங்கா, தன் சகோதரனுடன் பைக்கில் சென்றபோது, சாலையில் இருந்த குழியை தவிர்க்க இருசக்கர வாகனத்தை திருப்பியுள்ளார். அப்போது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்துள்ளனர். ஹெல்மெட் அணிந்திருந்த சகோதரர் உயிர் தப்பிய நிலையில், ஹெல்மெட் அணியாத பிரியங்கா லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்