Bihar Viral Video | பீகார் தேர்தல் நெருங்கும் நிலையில், பிரியாணிக்காக முண்டியடிக்கும் மக்கள்
பீகார் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் , பிரியாணிக்காக மக்கள் முண்டியடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. பீகார் தேர்தலிலும் பிரச்சார பேரணிகளுக்கு இலவசமாக உணவு வழங்கும் வழக்கம் உள்ளது. இந்நிலையில் பீகாரில், பகதூர்கஞ்ச் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் தௌசிஃப் ஆலம் என்பவரின் வேட்புமனு தாக்கல் நிகழ்வில், பிரியாணிக்காக மக்கள் முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.