Bihar | Congress | BJP | பீடியுடன் பீகாரை ஒப்பிடுவதா? - காங்., சர்ச்சை பதிவு

Update: 2025-09-06 03:20 GMT

Bihar | Congress | BJP | பீடியுடன் பீகாரை ஒப்பிடுவதா? - காங்., சர்ச்சை பதிவு


சமீபத்தில் பீடி மீதான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டிருந்த நிலையில், ஆங்கிலத்தில் பி என்று ஆரம்பிக்கும் பீடியையும், பீகாரையும் இனி பாவம் என்று கருத முடியாது எனக்கூறி கேரள மாநில காங்கிரஸ் கட்சி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டது. பீடியுடன் பீகாரை ஒப்பிடுவதா? என கூறி சர்ச்சைக்குரிய இந்த பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், இந்த பதிவை காங்கிரஸார் நீக்கினர். ஏற்கனவே பிரதமர் மோடியின் தாயாரை அவமதித்ததாக கூறி காங்கிரஸ் மீது விமர்சனங்கள் எழுந்திருந்த நிலையில், தற்போது இந்த பீடி விவகாரம் பீகார் மாநில அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்