ஐ.டி. ஊழியருக்கு பங்குச்சந்தையில் கொட்டிய ரூ.12 கோடி - சந்தோசத்தில் இருந்தவர் தலையில் இறங்கிய பேரிடி
பெங்களூரூவில் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் விஜய்குமார் என்பவரின் பங்குச்சந்தை 12 கோடி ரூபாயாக வளர்ந்திருந்தது என்பதை அறிந்த சிலர், காவல் துறை, சுங்கத்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் போல நடித்து அவருடன் தொடர்பு கொண்டனர். ஹவாலா வழக்கில் கைது செய்யப் போவதாக மிரட்டி, விஜய்குமாரின் KYC விவரங்களை பெற்று, 9 வங்கி கணக்குகளுக்கு அவரின் பணத்தை மாற்றினர். தன்னை மோசடி செய்திருப்பதை உணர்ந்த விஜயகுமார் பெங்களூரு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பின்னர் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் மூவர் கைது செய்யப்பட்டனர். அலஹாபாத்தில் உள்ள ஒரு வங்கி கணக்கில் ஏழரை கோடி ரூபாய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.