ATM ஊழியர்கள் மீது துப்பாக்கி சூடு..சதையை கிழித்து இறங்கிய புல்லட்..இன்ச் பை இன்ச் நடந்தது என்ன..?

Update: 2025-01-17 05:35 GMT

கர்நாடகாவில், தெலங்கானா மாநில எல்லைக்கு அருகே உள்ளது பீதார் Bidar நகரம். இங்குள்ள எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்மில் பணத்தை நிரப்ப பாதுகாப்பு ஏஜென்சி ஊழியர்கள் சென்றனர்.

அப்போது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், பாதுகாப்பு முகவர் மீது திடீரென உப்பு தூளை வீசி, துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் கிரிஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு ஊழியரான சிவகாசிநாத் படுகாயமடைந்தார்.

இதனைத்தொடர்ந்து ஏ.டி.எம்மில் நிரப்புவதற்காக கொண்டுவரப்பட்ட 93 லட்சம் ரூபாய் அடங்கிய பணப்பெட்டியை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.

கொள்ளையடித்த பணப்பெட்டியை பைக்கில் ஏற்ற முயல்வதும், தடுமாறி கீழே விழுவதும் என, பட்டப்பகலில் பொதுமக்கள் கண்முன்னே இவை அத்தனையும் நடந்துக்கொண்டிருந்தது.

பின்பு நிதானித்த கொள்ளையர்கள், சாவகாசமாக பணப்பெட்டியுடன் பைக்கில் ஏறிச்செல்லும் வீடியோக்கள் வெளியாகி, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக போலீசார் தீவிரமாக தேடிக்கொண்டிருந்த அதேவேளையில், ஹைதராபாத் சென்ற கொள்ளையர்கள், அங்கிருந்து வெளியூர் செல்வதற்காக டிராவல் ஏஜென்சி ஒன்றை அணுகியுள்ளனர்.’

அங்கிருந்த ஊழியர்களில் ஒருவர், பெட்டியுடன் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்த கொள்ளையர்களை அடையாளம் கண்டு, போலீசாருக்கு தகவல் சொல்ல முயற்சித்திருக்கிறார்.

ஆனால் அவர் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்திய கொள்ளையர்கள், அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற தெலங்கானா போலீசார், சம்பவ இடத்தில் ஆய்வு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

கர்நாடகா-ஹைதராபாத் எல்லைப் பகுதிகளில் தீவிர வாகன தணிக்கை நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்