ரூ.500 போட்டால் ரூ.1100 தந்த ATM... அள்ளி சென்ற மக்கள்... குவிந்த போலீசால் பரபரப்பு

Update: 2025-06-23 15:38 GMT

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள மால்புரா பகுதியில் ஏடிஎம்மில் 500 ரூபாய் எடுக்க முயன்றவருக்கு ஆயிரத்து 100 ரூபாய் பணம் வெளி வந்ததால், பணத்தை எடுக்க ATM முன்பு மக்கள் கூட்டம் குவிந்தது. இந்த தகவல் கிடைத்ததும் அப்பகுதிக்கு விரைந்த காவல்துறையினர் கூட்டத்தை கலைத்து வங்கி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்ததோடு, ஏடிஎம் மையத்தை மூடினர். ஆனால் அதற்குள்ளாக சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் அந்த ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து அதிக அளவிலான பணத்தை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. ஏடிஎம் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப குறைபாடு காரணமாக இந்த தவறு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்