தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக டெல்லி முதல்வர் அதிஷி மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். டெல்லி கல்காஜி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோவிந்தபுரி பகுதியில் போலீசாரை தாக்கியதாக அதிஷியின் ஆதரவாளர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவலர்களை அதிஷியின் ஆதரவாளர்கள் தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.