Amit Shah | "அவர்கள் மீது இரக்கமற்ற அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும்" - கண்சிவந்த அமித்ஷா
நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் குறைந்தபட்சம் ஒரு சிறையாவது சர்வதேச தரத்தில் அமைக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.
டெல்லியில் சிபிஐ சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், பொருளாதார குற்றவாளிகள், சைபர் குற்றவாளிகள், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மற்றும் இந்தியாவில் இருந்து தப்பியோடிய குற்றவாளிகள் மீது இரக்கமற்ற அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் குறைந்தபட்சம் ஒரு சிறையாவது சர்வதேச தரத்தில் அமைக்க வேண்டும்
இது வெளிநாடுகளுக்கு தப்பியோடிய குற்றவாளிகளை இந்தியாவிற்கு கொண்டு வர உதவும் என தெரிவித்தார். பொருளாதார குற்றவாளிகளான நீரவ் மோடி உள்ளிட்டோரை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில், இந்திய சிறைகள் தரமாக இல்லை என வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது, குறிப்பிடத்தக்கது.