விமானத்தில் கரப்பான் பூச்சி - மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா
விமானத்தில் கரப்பான் பூச்சிகள் இருப்பதாக பயணிகள் புகார் தெரிவித்ததை அடுத்து, ஏர் இந்தியா விமானம் மன்னிப்புக் கோரியுள்ளது. சான் பிரான்சிஸ்கோவில் இருந்து மும்பை வந்த அந்த விமானம், கொல்கத்தாவில் நிறுத்தப்பட்டபோது, அதில் கரப்பான் பூச்சிகள் இருப்பதாக 2 பயணிகள் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களுக்கு விமான ஊழியர்கள் மாற்று இடம் ஏற்பாடு செய்து கொடுத்தனர். அவர்கள் அமர்ந்திருந்த பகுதியும் சுத்தம் செய்யப்பட்டது. இந்நிலையில் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோருவதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.