அதானி குழுமம் மீது தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த ஹிண்டன்பர்க் முதலீட்டு ஆய்வு நிறுவனம் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அதானி குழும நிறுவனங்கள் மீது பல்வேறு முறைகேடு புகார்களை முன்வைத்து, அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் புயலைக் கிளப்பியது. இதனால் அதானி குழும நிறுவன பங்குகள், கடுமையாக வீழ்ச்சி அடைந்து பல பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது. இந்நிலையில், ஹிண்டன்பர்க் நிறுவனத்தை நிரந்தரமாக மூடுவதாக அதன் நிறுவனர் நேட் ஆன்டர்சன் அறிவித்துள்ளார்.