அதிகாலையில் கேட்ட பலத்த சத்தம் | சிதறி கிடந்த உடல் | படையெடுத்த போலீசார்

Update: 2025-08-30 05:13 GMT

வாடகை வீட்டில் திடீரென வெடித்த வெடிகுண்டு  வெடிக்காத வெடிகுண்டுகளை மீட்ட காவல்துறையினர்

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கண்ணபுரம் பகுதியில் வாடகைக்கு விடப்பட்டிருந்த வீட்டில் இன்று அதிகாலை 2 மணிக்கு பலத்த சத்தம் கேட்டது அக்கம் பக்கத்தில் உள்ள மக்கள் அங்கு சென்று பார்த்த போது வெடி விபத்து நிகழ்ந்திருந்தது தெரியவந்தது வீடு முழுவதுமாக தகர்ந்தது வீட்டிற்குள் இருந்து ஒருவரது உடல் சிதறிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் வெடிகுண்டு தயாரிக்கும் போது வெடித்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர் கீழரை பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் என்பவருக்கு சொந்தமான இந்த வீட்டில் இரு ஆண்கள் வாடகைக்கு குடியிருந்தனர் பையனூர் பகுதியில் உள்ள உதிரி பாகங்கள் விற்கும் கடை நடத்தி வருவதாக கூறியிருந்தனர் வெடி விபத்து நிகழ்ந்த வீட்டிலிருந்து வெடிக்காத வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளன இந்த வெடிகுண்டு விபத்தால் சம்பவ இடத்தை சுற்றி உள்ள வீடுகளுக்கும் பாதிப்புகள் ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்