கேரளாவை கதிகலங்க விடும் விபரீத வைரஸ் - தமிழக எல்லைக்கு அருகிலே வந்த அபாயம்
பாலக்காட்டில் மீண்டும் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு
கேரளா மாநிலம் பாலக்காட்டில் மீண்டும் நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 12ஆம் தேதி குமரன்புத்தூரை சேர்ந்த 58 வயது முதியவர் நிபாவால் உயிரிழந்த நிலையில், அவருடன் தொடர்பில் இருந்த அவரது 32 வயது மகனுக்கு நிபா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாலக்காட்டில் மூன்றாவதாக ஒரு நபர் நிபா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார். பாலக்காட்டில் சுமார் 347 பேர் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை தொடர்பு பட்டியலில் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர். குமரன்புத்தூர், கரக்குறிச்சி, கரிம்புழா பஞ்சாயத்துகள் மற்றும் மன்னார்க்காடு நகராட்சியின் ஐந்து வார்டுகளில் நிபா வைரஸ் கட்டுப்பாடுகள் தொடரும் என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.