பெங்களூருவில் நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த மாநகர பேருந்து
கர்நாடக மாநிலம் பெங்களூருவில், நடுரோட்டில் பேருந்து தீப்பற்றி எரிந்த நிலையில், பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
பெங்களூரு எச்.ஏ.எல். மேயின் கேட் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த மாநகர பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 60க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். திடீரென எஞ்சின் பகுதியில் புகை வெளியேறியதால் ஓட்டுநர், உடனடியாக பயணிகளை பாதுகாப்பாக கீழே இறக்கினார். சில நொடிகளில் பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படையினர், தீயை கட்டுப்படுத்தினர்.