தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 500 கிலோ குட்கா பறிமுதல்

Update: 2025-06-01 10:31 GMT

கடலூரில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை தோட்டத்தில் பதுக்கி விற்பனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கடலூர் கூத்தப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவர் வீட்டில் குட்கா வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் 348 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் பாபு, அய்யன் பெருமாள், சரவணன் ஆகிய 3 பேரை கைது செய்த திருப்பாப்புலியூர் போலிசார் அவர்களிடம் நடத்திய விசாரனையில், பாபுவின் வீட்டு தோட்டத்தில் குழி தோண்டி குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து பதுக்கி வைத்திருந்த 126 கிலோ குட்கா பொருட்களை போலீசார் கைப்பற்றினர். மொத்தம் 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான 500 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்

Tags:    

மேலும் செய்திகள்