3 வருசம் ஜெயில்.. இல்லன்னா ரூ.1 கோடி ஃபைன் - நாடு முழுவதும் அமலாகும் புதிய சட்டம்

Update: 2025-08-20 04:22 GMT

ஆன்லைன் சூதாட்ட மசோதா இன்று தாக்கல்

ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் மசோதாவை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் இன்று தாக்கல் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குபடுத்துதல் மற்றும் ஊக்கப்படுத்துதல் மசோதா 2025 என பெயரிடப்பட்டுள்ள இந்த மசோதா,

ஆன்லைன் விளையாட்டு தளங்களை சட்ட வரம்புக்குள் கொண்டு வந்து, டிஜிட்டல் செயலிகள் மூலம் நடைபெறும் சூதாட்டங்களுக்கு அபராதம் விதிக்க வழி செய்கிறது.

விதிகளை மீறி ஆன்லைன் விளையாட்டு சேவையை வழங்கும் நபருக்கும், அதற்கான பரிவர்த்தனையில் ஈடுபடுவோருக்கும்

அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 1 கோடி ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கும் வகையில் மசோதாவிம் அம்சங்கள் இடம்பெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்