ராமர் கோயிலில் 2ம் கட்ட பிராண பிரதிஷ்டை - பக்தர்கள் வழிபாடு
அயோத்தியாவில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் இரண்டாம் கட்ட பிராண பிரதிஷ்டை நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலின் முதல் தளத்தில் இருக்கும் ராம் தர்பார் விக்ரகங்களுக்கு பிராண பிரதிஷ்டை நடைபெற்றது. இதனை முன்னிட்டு, ராமர் சீதா, லட்சுமணன், அனுமன் உள்ளிட்ட விக்கிரகங்களுக்கு தங்க கிரீடங்கள் வில் அம்பு மற்றும் நகைகள் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பிரான பிரதிஷ்ட மஹோத்சவத்திற்காக தெய்வ விக்ரங்களுக்கு அணிவிக்க சூரத்தை சேர்ந்த தொழிலதிபர் முகேஷ் என்பவர் ராமருக்கு 1000 காரட் வைரங்கள், 30 கிலோ வெள்ளி, 37 பவுன் தங்கம் மற்றும் 300 காரட் மாணிக்கங்கள் உள்ளிட்ட ஆபரணங்களை உபயமாக வழங்கினார்.