ரஷ்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இந்தியா - பேரதிர்ச்சியில் டிரம்ப்

Update: 2025-08-22 04:31 GMT

ரஷ்யாவிற்கான இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிப்பு

அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு மத்தியில் ரஷ்யாவிற்கான இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரிப்பதன் மூலம் ரஷ்யாவுடனான தனது வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்துவதில் இந்தியா கவனம் செலுத்துகிறது.

தனது ரஷ்ய பயணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், குறிப்பாக விவசாயம், மருந்தகம், ஜவுளி உள்ளிட்ட துறைகளில் ரஷ்யாவுக்கான ஏற்றுமதியை அதிகரிக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான பாதுகாப்பு மற்றும் ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு வலுவாக உள்ளதாகவும், இந்தியாவின் 'மேக் இன் இந்தியா' இலக்குகளை ரஷ்யா ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய எண்ணையை அதிகம் வாங்குபவர்கள் சீனா என்றும் திரவியமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை ரஷ்யாவிடமிருந்து ஐரோப்பிய ஒன்றியமே அதிகம் வாங்குவதையும் சுட்டிக்காட்டி,

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகின் முக்கிய உறவுகளில் இந்தியாவும் ரஷ்யாவும் மிகவும் நிலையானவை என்று இருதரப்பு உறவு குறித்து தெரிவித்தார்.

மேலும், தனது ரஷ்ய பயணத்தில்

உக்ரைன், மேற்கு ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், இந்த விவாகரங்களில் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணப்படுவது குறித்து இந்தியா நிலைப்பாட்டை தெரியப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்