"அண்ணா சிசிடிவி இருக்குனா" இரும்பு கம்பி திருட்டு சிசிடிவியில் மாட்டிக்கொண்ட இருவர்
இரும்பு கம்பிகளை திருடிச் செல்லும் இருவரின் சிசிடிவி காட்சிகள்
செங்கல்பட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் கட்டிடத்தில் சிசிடிவி கேமரா இருப்பது தெரியாமல் திருடிய இரு நபர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. திருடிவிட்டு செல்லும்போது "அண்ணா சிசிடிவி கேமரா இருக்குனா, நம்ம மாட்டிக்கிட்டோம் அண்ணா" - என சிறுவன் பதற்றத்துடன் கூறும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. செங்கல்பட்டு அடுத்த மாமண்டூர் பகுதியை சேர்ந்த பேரின்பராஜ், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே பழவேலி பகுதியில் புதிதாக வீடு கட்டி வரும் நிலையில், அந்த கட்டிடத்தில் வைத்திருந்த 100-க்கும் மேற்பட்ட இரும்பு கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து அவர் போலீஸில் அளித்த புகாரின் பெயரில்,
சென்னை வண்ணாரப்பேட்டை தமிழ்நாடு வீட்டுவசதி குடியிருப்பு பகுதியை சேர்ந்த தீபக் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.